Thursday, May 2, 2024

வருகிறாள் ரீவால்வர் ரீட்டா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமாகினார், நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார். கடைசியாக தெலுங்கு படமான ‘தசரா’-வில் நானியுடனும், தமிழ் படங்களான ‘மாமன்னன்’ மற்றும் ‘சைரன்’-இல் நடித்துள்ளார். இந்த படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

தற்போது, இயக்குநர் சந்துரு இயக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தில் நடித்திருக்கிறார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு, ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்தப் போஸ்டரை நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். வித்தியாசமான முறையில் வெளியான இந்தப் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோவை தங்களது எக்ஸ் பக்கத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News