Thursday, May 2, 2024

வெற்றிமாறனோடு கூட்டணி அமைக்கும் கவின்? இனி இவரு‌ ரகமே வேற…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு, கவின் அடுத்ததாக இளன் இயக்கத்தில் “ஸ்டார்” படத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் அனிருத் இசையில் ஒரு படத்தில் கவின் நடித்து வருகிறார். அதேபோல் நெல்சன் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். தற்போது, கவின் நடிக்கும் 7வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றி மாறன் ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளார் என்று கூறப்படடுகிறது. அவரது உதவி இயக்குநர் விக்ரனன் அசோகன் இப்படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும், பிரபல நடிகை ஆண்ட்ரியா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News