Monday, May 27, 2024

கருப்பு நிற உடையால் ரசிகர்களை காந்தமாய் இழுத்த அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அனுபமா பரமேஸ்வரன் தற்போது தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் முதல் முறையாக மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்தார், இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.

அதன் பின், அவர் பல மலையாளப்படங்களில் நடித்துள்ளார்.அதற்குப் பிறகு, தெலுங்கு சினிமாவை நோக்கி பயணித்தார். அங்கு இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தபின், அவரது படங்கள் தொடர் வெற்றிகளை பெற்றன. இதனால், தெலுங்கில் அதிகமான படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழில், அவர் தனுஷ் நடித்த கொடி படத்தில் மட்டுமே முதலில் நடித்திருந்தார்.

அனுபமா நடித்த கார்த்திகேயா 2 படம் ஆந்திராவில் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதர்வாவுடன் தள்ளிப்போகாதே படத்தில் நடித்திருந்தார் அதுமட்டுமின்றி தில்லு ஸ்கொயர் படத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை ஒருவழி செய்திருப்பார் அப்படமும் ஹிட் அடித்தது. மேலும், ஜெயம் ரவியுடன் சைரன் படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக அசத்தி இருந்தார்.

இப்போது இவர் சில புதிய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.அவற்றில் பைசன் எனும் தமிழ் படமும் ஒன்று. அதேசமயம், மாடலிங் அழகியாக விதவிதமான உடைகளில் தனது அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற உடையில் லேட்டஸ்ட்டாக அவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News