Monday, May 27, 2024

எந்த அப்டேட்டா இருந்தாலும் அவங்க தான் சொல்லுவாங்க…என்னால முடியாது! – நடிகை அஞ்சலி #GameChanger

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS👆

நடிகை அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் இரண்டிலும் பிஸியாக நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள‌ ‘கேங்ஸ் ஆப் கோதாவரி’ என்ற தெலுங்கு திரைப்படம் இந்த வாரம் மே 31-ந் தேதி வெளியாக உள்ளது. விஷ்வக் சென் நாயகனாக நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தற்போது, அஞ்சலி இந்த படத்தின் புரமோஷன்களில் முழு நேரமாக ஈடுபட்டு உள்ளார்.ஒரு சமீபத்திய பேட்டியில், ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தைப் பற்றி கேட்டபோது, “நான் ‘கேம் சேஞ்சர்’ பற்றிக் கூற ஆவலாக இருக்கிறேன். ஆனால், நடிகர்களுக்கு அந்தப் படத்தைப் பற்றி பேச அனுமதி இல்லை. எந்த தகவலாக இருந்தாலும் அது ஷங்கர் சாரின் வாயிலாகவே வரும் அல்லது தயாரிப்பாளர் தில் ராஜூ சாரின் மூலம் தான் கிடைக்கும் என கூறியுள்ளார்.

இப்படத்தில் நானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நானும் ஒரு கதாநாயகிதான். விரைவில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்,” என்று பதிலளித்தார். மேலும், தமிழில் அஞ்சலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் ஜூலை மாதத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News