Monday, May 27, 2024

தக் லைஃப் படப்பிடிப்பு தளத்தில் குழந்தைகளுடன் க்யூட்டாக புகைப்படம் எடுத்துக்கொண்ட சிம்பு! #ThugLife

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Play For News Via Audio

உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குனர் மணி ரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34 ஆண்டுகள் கழித்து, ‘தக் லைஃப்’ என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்.இந்தப் படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தில் இணைந்துள்ளார்.ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை நகரில் நடைபெற, இரண்டாம் கட்டம் செர்பியாவில் நடைபெற்றது. சமீபத்தில், சிம்பு தக் லைஃப் படத்தில் இணைந்தார்.தற்போது, அடுத்தகட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைப்பெற்றது.

சிம்புவின் ப்ரோமோ காட்சிகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலானது. சிம்பு இப்படத்தில் கமல்ஹாசனின் மகனாக நடிக்கவிருப்பதாக தகவல் பரவியுள்ளது.

தற்போது, படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் குழந்தைகளுடன் சிம்பு எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் சிம்பு அனைத்து சிறுவர்களுடன் அன்பாக கை கொடுத்து, அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

- Advertisement -

Read more

Local News