Sunday, May 26, 2024

அபுதாபியில் பாப்ஸ் ஹிந்து மந்தீர் கோயிலுக்கு சென்ற ரஜினி… ட்ரெண்டாகும் புகைப்படங்கள்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கோல்டன் விசா வழங்கிய பின், அவர் அங்கு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த பயணத்தின் போது, அவர் பல முக்கிய நபர்களை சந்தித்து வருகிறார். தற்போது அபுதாபியில் உள்ள ரஜினிகாந்த், புதிதாக கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்து கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

சமீபத்தில், டிஜே ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த், அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என தெரிகிறது. இந்த இரண்டு படங்களுக்கு இடையில் தானே அவர் தற்போது அபுதாபிக்கு சென்றுள்ளார்.

அங்கு, புதிதாக கட்டப்பட்டுள்ள பாப்ஸ் ஹிந்து மந்திர் இந்து கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்டுள்ளார். இந்த தரிசனத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும், ரஜினிகாந்த், கோல்டன் விசா பெற உதவிய கேரளாவை சேர்ந்த லுலு குடும்பத்தின் மேலாண்மை இயக்குனர் யூசுப் அலியை சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த கோல்டன் விசா மூலம், அவர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகனாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News