Saturday, May 4, 2024

தனது முதல் படத்திலேயே கவினை வச்சு செய்த நெல்சன்… கெட்டப்பை கண்டு குமுறும் ரசிகர்கள்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஃபிலமண்ட் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நெல்சன் தொடங்கி உள்ளார். இது குறித்த அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். தற்போது நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் புரமோ தற்போது வழக்கம் போல நெல்சன் ஸ்டைலில் செம காமெடியாக வெளியாகி இருக்கிறது.இப்படத்திற்கு ‘பிளடி பெக்கர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நமக்கு பிடித்த மாதிரியான படங்களை செய்ய வேண்டும் என்றால் நாமே தயாரித்தால் தான் உண்டு என அவர் பேட்டி ஒன்றில் சொன்ன நிலையில், அவரை ரெடின் கிங்ஸ்லி தயாரிப்பாளராக கோர்த்து விட்டது போல இந்த புரமோ வெளியாகி இருக்கிறது.

நெல்சன் வழக்கம் போல தனது ஸ்டைல் புரமோவை கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். நெல்சன், ரெடின் கிங்ஸ்லி, சிவபாலன் மற்றும் கவின் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ள ‘பிளடி பெக்கர்’ படத்தின் இன்ட்ரோ வீடியோ செம காமெடியாக இருக்கிறது.

கவினின் புதிய கெட்டப் இந்த படத்தில் பார்க்கப் போறீங்க என நெல்சனுக்கு பில்டப் கொடுக்க கவினை பொம்பள கெட்டப்பிலேயே பார்த்துட்டேன். இன்னும் நான் அம்மணமாதான் பார்க்கல என நெல்சன் சொல்லி விட்டு ரெடின் கிங்ஸ்லி சர்ப்ரைஸ் என கண்களை எல்லாம் பொத்திக் கொண்டு அவரை அழைத்து வர பிச்சைக்கார கெட்டப்பில் கவின் இருப்பதை பார்க்கவே பரிதாபமாக இருக்கு என்றும் இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News