Saturday, May 4, 2024

அடுத்தப்படம் ரெடி! T.J.ஞானவேல் போட்ட ஸ்கெட்ச் யாருக்கு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் தான் வேட்டையன். இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சுவாரியர், ராணா டகுபாட்டி, ரித்திகா சிங், பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் வேட்டையன் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது படத்தின் சூட்டிங் மும்பையில் நடந்து வரும் சூழலில் இந்த படத்தை விரைவில் நிறைவு செய்துவிட்டு அடுத்த படத்தில் டிஜே ஞானவேல் ஒரு பிரபல நடிகருடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த மாதத்திற்குள் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் இணைந்துள்ள சூழலில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மும்பை சென்றிருந்தார் ரஜினிகாந்த். அவரும் அமிதாப் பச்சனும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்த புகைப்படங்கள் நேற்று வெளியாகி ட்ரெண்ட் ஆகின.

சூர்யா நடித்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் ஓடிடியில் வெளியான போதிலும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சிறப்பான அனுபவத்தை கொடுத்தது. தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார் டிஜே ஞானவேல். போலி என்கவுண்டருக்கு எதிரான படம் வேட்டையன் என்று கூறப்பட்டுள்ளது. இதே போல கல்வியில் நடந்து வரும் ஊழல் குறித்தும் இந்த படம் பேச‌ இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு முக்கிய சந்திப்பில் ஏற்பட்ட நட்பில் டிஜே ஞானவேல் நானிக்கு ஒரு கதையை சொன்னதாகவும் அது அவரை மிகப்பெரிய அளவில் கவர்ந்த சூழலில் அந்த படத்தில் நடிக்க அவர் ஓகே சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை ஞானவேல் விரைவில் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இவர் ரஜினியின் வேட்டையன் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக நானியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

- Advertisement -

Read more

Local News