Saturday, May 4, 2024

ஷங்கர் தலையில் விழுந்த இடி…மீண்டும் தள்ளி போகிறதா இந்தியன் 2?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரம்மாண்டம் என்றாலே அது ஷங்கர் தான் இப்படி பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் திரைப்படத்தில் இந்தியன் 2 படம் தொடர் சிக்கல்களை சந்தித்து வந்தது. தற்போது படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதி மே மாதத்திற்கு முடிவு செய்தார்கள்.பிறகு ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் ஒருவழியாக ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆகப்போகிறது என்ற அறிவிப்பை வெளிவந்தது.ஆனால் தற்போது வந்த தகவலின் படி ஜூன் மாதத்தில் ரிலீஸ் பண்ணுவதற்கு வாய்ப்பு குறைவாம். காரணம் இன்னும் ஒரு பாடல் பாக்கி இருக்கிறது என கூறப்படுகிறது.

அதாவது அந்த பாடல் இந்த படத்திற்கு மிகவும் முக்கியமாக இருக்கும் என்று நினைத்த இயக்குனர் சங்கர்.மிகப்பெரிய செலவில் அப்படாலை எடுக்க வேண்டும் என்று பிளான் பண்ணி உள்ள நிலையில் இது குறித்து‌லைக்கா-விடம் பேசிய போது அவர் அந்தப் பாடலை வேண்டாம் என சொன்னதாக சொல்லப்படுகிறது.

இப்போது நிதி நெருக்கடியில் தவித்து வரும் சூழலில் பநீங்கள் சொல்றபடி எல்லாம் ஒரு பாட்டுக்காக அவ்வளவு செலவு பண்ண வாய்ப்பு இல்லை என கூறிய இயக்குனர் சங்கர்-க்கு தலையில் இடி விழுந்தது போல் உள்ளதாம்.இதனால் இந்த பாடல் இல்லாமல் இந்தியன் 2 படத்தை ரிலீஸ் பண்ண முடியாத நிலைமையில் சங்கர் கவலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்பிரச்சனையை சரி செய்து பாடலை உள்ளே கொண்டு வந்து படத்தை ஜூலை மாதத்தில் ரிலீஸ் பண்ணலாம் என்று முடிவு எடுத்து வைத்திருக்கிறாராம் ஆனால் இப்படம் கடைசி வரை வருமா வராதா என ரசிகர்கள் கேள்விகளை குவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News