Wednesday, May 8, 2024

குபேரா பட ஷூட்டிங்கிற்காக 10 மணி நேரம் குப்பை கிடங்கில் இருந்த தனுஷ்… மனதை நெகிழவைத்த சம்பவம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.தற்போது அடுத்தடுத்தென தெலுங்கு பட இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு பிரபல தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்திருந்தார் தனுஷ்.குபேரா பட சூட்டிங் மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் விரைவில் குபேரா படத்தின் சூட்டிங் நிறைவடைந்து இந்த ஆண்டிலேயே படம் ரிலீசாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் மும்பை தாராவியை அடிப்படையாகக் கொண்ட கேங்ஸ்டர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துவரும் சூழலில் படத்தில் வில்லனாக நாகார்ஜுனா நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இப்படத்தில் தனுஷ் யாசகனாக கதாபாத்திரத்தில் இருந்து கேங்ஸ்டராக மாறுவதாக படத்தின் கதையை இயக்குனர் அமைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகார்ஜுனாவின் ஃபர்ஸ்ட் லுக் கிளிம்ப்சும் வெளியான சூழலில் அதில் கட்டு கட்டான பணத்துடன் அவர் காணப்பட்டார்.

இப்படி அடுத்தடுத்தென எதிர்பார்ப்பை கிளப்பும் குபேரா அப்டேட்களால் இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த படத்திற்காக மும்பையில் நடத்தப்பட்ட ஷூட்டிங்கில் குப்பை கிடங்கின் இடையே நடிகர் தனுஷ் தொடர்ந்து பத்து மணி நேரம் மாஸ்க் கூட இல்லாமல் நடித்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இது ரசிகர்களை மிகவும் ஆச்சிரியத்திலும் மெய்சிலிர்ப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News