Friday, May 24, 2024

குட் பேட் அக்லி படத்தில் இணைந்த நயன்தாரா? அடேங்கப்பா சம்பளம் இத்தனை கோடியா?…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேரளாவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நயன்தாரா, தமிழில் ‘ஐயா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவர் நடித்த முதல் படம் மிகப்பெரிய வெற்றியடைந்து, அவரது நடிப்புக்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர், ரஜினிகாந்துடன் ‘சந்திரமுகி’ படத்தில் நடித்ததன்மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். அதன் பின்னர் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்தார். தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் அவருக்கு ஏமாற்றமளித்தது, குறிப்பிடத்தக்கது இது அவரது 75வது படம். தமிழில் ‘மண்ணாங்கட்டி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார், அதேபோல் மலையாள மொழி படத்திலும் கமிட்டாகியுள்ளார். கடினமாக வேலை செய்தாலும், தனது மகன்கள் மற்றும் கணவருடன் நேரம் செலவழிப்பதில் கவனமாக இருக்கிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸை குவிப்பார்.

சமீபத்தில், நயன்தாரா பற்றி ஓர் தகவல் பரவி வருகிறது. அதாவது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் ஸ்ரீலீலா மட்டுமின்றி நயன்தாராவும் நடிக்கிறார் என்பதே அது. இதனால் பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர், ஏனெனில் விக்னேஷ் சிவன் – அஜித் இணைய இருந்த படம் ட்ராப் ஆனதன் காரணமாக நயன் அஜித்திடையே மனக்கசப்பு இருந்ததாக கூறப்பட்டது.

இவ்வளவு விசயங்களின் மத்தியில், குட் பேட் அக்லி படத்தில் நயன்தாரா நடிப்பது உறுதி‌‌ எனவும் , அவர் 10 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாகவும் புதிய தகவல் வெளிவந்துள்ளது. இதைக் கேட்ட ரசிகர்களும், திரைத்துறையினரும் அதிர்ச்சியுடன் 10 கோடி சம்பளமா என்று வியந்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News