Friday, May 24, 2024

கலகலப்பு 3 படப்பிடிப்பிற்கு தயாரான சுந்தர் சி…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் இயக்குநர் சுந்தர் சி இயக்கி, நடித்து வெளியான படம் அரண்மனை 4. இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மே 3ஆம் தேதி வெளியான அரண்மனை 4 படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேற்பட்ட வசூலை அடைந்துள்ளது. இப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், சுந்தர் சி இயக்கத்தில் பிரபலமான கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதில் சிவா, விமல் மற்றும் வாணி போஜன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கலகலப்பு 3 படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கும் என தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News