Saturday, May 25, 2024

ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பெற்ற`பார்க்கிங்’… ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பதிவு…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பியார் பிரேமா காதல்’, ‘தாராள பிரபு’ போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் இதயம் கவர்ந்த ஹரிஷ் கல்யாண், கடந்த ஆண்டு ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய ‘பார்க்கிங்’ படத்தில் நடித்தார். இப்படம் வெளியானபோது நற்பெருவாரியாக வரவேற்பு பெற்றதோடு, வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல பெயரையும் பெற்றது.‘

பார்க்கிங்’ திரில்லர் ட்ராமாவாக உருவாக்கப்பட்டு, ‘பலூன்’ பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்தார். பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்தது குறிப்பிடத்தக்கது. ராம்குமார் பாலகிருஷ்ணன், முன்பு ‘பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்தார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் சாம் சிஎஸ், ஒளிப்பதிவு செய்தவர் ஜிஜு சன்னி.ஒரு ஐடி இளைஞனும், அரசாங்க ஊழியரும் ஒரே குடியிருப்பில் வசிக்கின்றனர். அந்த வீட்டில் ஒரே ஒரு பார்க்கிங் ஸ்லாட் மட்டுமே உள்ளது.

அதில் யார் காரை நிறுத்துவது என்பது மையமாகக் கொண்டு இயக்குனர் படத்தை இயக்கியுள்ளார். தனிமனித ஈகோ எவ்வளவு மீறி செல்லும் என்பதை இப்படம் தெளிவாக காட்சி படுத்துகிறது. ராம்குமார், இப்படத்தின் திரைக்கதை மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News