Thursday, May 23, 2024

புஷ்பா 2 படத்தின் ‘The Couple Song ‘அப்டேட் வெளியீடு… #PUSHPA 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2021 ஆம் ஆண்டில் அல்லு அர்ஜுன் நடித்த திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’ வெளியானது. இதில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார்.

இந்த திரைப்படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்று, ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதேவேளை, இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களின் மிகுந்த கவனத்தைப் பெற்றன.இந்த படத்தின் மிகப்பெரும் வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பாவின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.

‘புஷ்பா 2 தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் டீசரும், அதனைத் தொடர்ந்து ‘புஷ்பா புஷ்பா’ என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியிடப்பட்டு வைரலானது.

இவ்வேளையில், ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர். (The Couple Song)’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல் வரும் 29-ந்தேதி காலை 11.07 மணிக்கு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர், மேலும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News