Thursday, May 23, 2024

கேப்டன் விஜயகாந்த்திற்காக விஜய் கொடுத்த அந்த வாக்குறுதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு, ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயகாந்தை பத்து நிமிடங்கள் கோட் படத்தில் திரையில் தோன்றச் செய்ய போகிறார். இதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டது.இந்த முயற்சிக்காக பிரேமலதா, கேப்டன் நடித்த படங்களின் ஒரிஜினல் ஃபுட்டேஜ்களை கோட் படக்குழுவிற்கு வழங்கியுள்ளார்.

இதன் மூலம் விஜய் மற்றும் விஜயகாந்த் குடும்பத்திற்கு இடையே மேலும் நல்ல புரிதல் உருவாகியுள்ள நிலையில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த படமான படைத்தலைவனின் டீசர் வெளியீட்டிற்காக விஜய்யின் ட்விட்டர் அக்கவுண்டில் ரிலீஸ் செய்யும்படி சண்முக பாண்டியன் மற்றும் பிரேமலதா விஜய்யிடம் கேட்டுக்கொண்டனர்.இதற்கு விஜய், அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பதிலை சொல்லி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

படைத்தலைவன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு நான் வருவேன் என்று விஜய், சண்முக பாண்டியனிடம் உறுதி அளித்துள்ளார். ஜூன் மாத இறுதியில் இந்த விழா நடைபெறவுள்ளது, இதில் முக்கிய விருந்தினராக விஜய் பங்கேற்கவுள்ளார்.

முன்னதாக ராகவா லாரன்ஸ் படைத்தவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றியுள்ளார்.ஒரு காலத்தில் விஜய்க்கு சினிமாவில் முக்கிய திருப்புமுனை கொடுத்தவர் கேப்டன் என்பதும் அதை விஜய் என்றும் மறந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News