Wednesday, May 8, 2024

அடங்காத அசுரன்’ ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த ராயன் அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ப.பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ராயன்.நடிகர் தனுஷ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ராயன்.சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான்.ராயன் படம் ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகவிருந்த சூழலில் தற்போது படத்தின் ரிலீஸ் ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது.

ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 9ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து இசைப்புயல் ஏஆர் ரகுமான் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அப்டேட்-ஐ பதிவிட்டுள்ளார். நேற்றைய தினம் தனுஷ் மற்றும் படக்குழுவினர் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் தெரிவித்த சூழலில் தற்போது இசைப்புயல் மீண்டும் புதிய போஸ்டருடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த ராயன் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தையும் இயக்கி வருகிறார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற அந்த படத்தின் ஷூட்டிங் 70% முடிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தன்னுடைய வொண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்து வருகிறார்‌.

இந்நிலையில் தற்போது கேங்ஸ்டர் கதைக்களத்தில் அவர் களமிறங்கியுள்ளார்.படத்தில் ரோட்டோர உணவுக்கடையை தனுஷ் தன்னுடைய தம்பிகளுடன் இணைந்து நடத்தி வருவதாகவும் அவரது பிளாஷ்பேக் குடும்பத்தினருக்கு தெரியும்போது ஏற்படும் விளைவுகளையும் படம் பேசுவதாக கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News