நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.கடைசியாக தி கோட் படப்பிடிப்பிற்காக ரஷியா சென்று திரும்பினார் விஜய்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/05/goat-01012024-4-1024x576.jpg)
இப்படத்திற்கு பிறகு தளபதி 69 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது,ஆனால் இன்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது. விஜய் அரசியல் களத்தில் இறங்கியுள்ள சூழலில் இப்படம் நிச்சயம் அரசியலை மையமாக கொண்டு தான் கூறப்படுகிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/05/Vijay-join-with-H-Vinoth.jpg)
இந்நிலையில், தளபதி 69 படத்தை யார் தயாரிப்பது என்பது குறித்த பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், நடிகர் யாஷின் டாக்சிக் படத்தைத் தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் விஜய்யின் தளபதி 69 படத்தைத் தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/05/GAzaO6GWwAAhFiX-1024x539.jpeg)