Monday, May 6, 2024

சிம்ரன் குஷ்பு அரண்மனை 4 க்ளைமாக்ஸில் ஆடிய ஆட்டம்! மேக்கிங் வீடியோவை வெளியிட்ட சிம்ரன்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுந்தர் சி இயக்கத்தில், அரண்மனை 4 இந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் அம்மன் பாடலுக்கு சிம்ரனும் குஷ்புவும் சாமியாட்டம் ஆடி இருப்பர்.இப்பாடல் படப்பிடிப்பின் வீடியோவை நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அரண்மனை 4 ரிலீசுக்கு முன் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தவில்லை.ஆனால் படம் வெளியானதும் கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்-ல் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்தனர்.விமர்சன ரீதியாக பார்க்கும் போது படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த பட வெற்றியின் முக்கிய பங்களிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் நடிகை சிம்ரன் குஷ்பு ஆடிய அம்மன்” பாடல் நடனம் தான்.ஆள் தோட்ட பூபதிக்குப் பிறகு பல படங்களில் சிறப்பாக நடனமாடிய சிம்ரன், கடைசியாக சூர்யாவுடன் பிதாமகனில் நடனமாடினார்.இந்நிலையில் இந்த படத்தில் சிம்ரன் ஆடிய சாமியாட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

VIDEO LINK: https://www.instagram.com/reel/C6lLLk1tv5K/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

உடுக்கை பிறந்ததம்மா ஒரத்தநாடு பூமிலே என்ற இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட சிம்ரன், எனக்கு நடனமாட வாய்ப்பளித்த அக்கா குஷ்பா, பிருந்தா மற்றும் சுந்தர் சி சார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News