Saturday, May 25, 2024

நிறைவடைந்த அமரன் படத்தின் படப்பிடிப்பு! விருந்தளித்து கொண்டாடிய சிவகார்த்திகேயன்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21 திரைப்படத்திற்கு “அமரன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதற்கு முன் “அயலான்” திரைப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், குடும்பங்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.பிப்ரவரி 16-ஆம் தேதி “அமரன்” படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.இந்த திரைப்படத்தில் “முகுந்தன்” என்ற ராணுவ வீரராக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் நடித்துள்ள இப்படம், மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்தன் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் “அமரன்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் படக்குழுவினர்களுக்கு விருந்து அளித்தார்.

படத்தில் பணியாற்றிய அனைவரும் இதில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு அன்புடன் பிரியாணி பரிமாறும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மேலும், மிகவும் விரைவில் படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு “அமரன்” திரைப்படம் ஒரு பெரிய விருந்தாக அமையும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News