Saturday, May 25, 2024

கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்று அசத்திய அனுசுயா‌‌ சென்குப்தா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேன்ஸ் திரைப்பட விழா தற்போது நடைபெற்று வருகிறது, உலகின் தலைசிறந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார்கள்.

இந்த விழாவில் இந்திய நடிகை அனசுயா சென்குப்தா சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். கேன்ஸ் விழாவில் Un Certain Regard பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டன, இதில் அவர் ஷேம்லெஸ் (Shameless) திரைப்படத்தில் நடித்ததற்காக விருதைப் பெற்றார்.

இந்த விருதை வெல்லும் முதல் இந்திய நடிகை அனசுயா சென்குப்தா ஆவார். இந்த படத்தை பல்கேரிய இயக்குனர் கான்ஸ்டன்டைன் போஜனாவ் இயக்கியுள்ளார். டெல்லி விபச்சார விடுதியில் ஒரு போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடும் பாலியல் தொழிலாளியின் கதையை இந்த திரைப்படம் சித்தரித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News