Advertisement

நிறைவடைந்த ‘இரண்டு வானம்’ படத்தின் டப்பிங் பணிகள்!

‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். தொடர்ந்து ‘குள்ளநரி கூட்டம்’, ‘நீர்ப்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’, ‘கட்டா குஸ்தி’, ‘ஆர்யன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ படங்களை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஷ்ணு விஷால் இணைந்துள்ளார். ‘இரண்டு வானம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

உண்மையான அன்பு ஒருவரின் வாழ்க்கையிலும் மனநிலையிலும் ஏற்படுத்தும் மாற்றங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ‘இரண்டு வானம்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply