இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும் தொழிலதிபருமான காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் கிரீஸ் நாட்டில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த நவம்பர் 10-ம் தேதி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட நிலையில், நவம்பர் 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், தனது திருமணத்தின் சிறப்புத் தருணங்களைப் பதிவு செய்த புகைப்படங்களை அனிருத் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கிரீஸில் நடைபெற்ற இந்தத் திருமணத்தைத் தனது ‘பிடித்தமான மாயாஜாலம்’ என்று குறிப்பிட்டு அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அனிருத் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் புன்னகைக்கும் காட்சிகளும், இரு குடும்பத்தினரும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் தருணங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
