Advertisement

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்தின் இரண்டாவது பாடலு வெளியீடு!

‘கிடா’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தகப்பன்’. இப்படத்தில் ஜீவா கதாநாயகனாகவும், ரஜிஷா விஜயன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ‘மாமன்’, ‘கருடன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார்.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. அப்பா – மகன் இடையேயான உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக இப்படம் தயாராகியுள்ளது. மதுரை மேலூர் பகுதியில் உள்ள மேலவளவு கருப்புக் கோவிலில் படப்பிடிப்பு தொடங்கியது. அதே இடத்தில் இறுதிக்கட்ட இரவு நேரப் படப்பிடிப்பும் நடைபெற்றது. படத்தின் முழுப் படப்பிடிப்பும் 40 நாட்களில் நிறைவடைந்ததாகப் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீட்டு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘சொக்க வச்சாளே’ வெளியாகியுள்ளது. குடும்ப உறவுகளையும் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Add a Comment

Leave a Reply