Advertisement

‘சேயோன்’ படத்தில் மீண்டும் விருமாண்டியாக கமல்ஹாசன்? வெளியான புதிய தகவல்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சேயோன்’. இப்படத்தில் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும், 2004-ம் ஆண்டு வெளியான ‘விருமாண்டி’ படத்தில் அவர் ஏற்றிருந்த அதே கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘சேயோன்’ படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, இதற்கும் ‘விருமாண்டி’ படத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற பேச்சு நிலவி வருகிறது. தற்போது கமல்ஹாசன் மீண்டும் விருமாண்டி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். தமிழ்க் கடவுள் முருகனை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதால் படத்திற்கு ‘சேயோன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாகவும், சீமான், பால சரவணன், சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் மதுரை மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசன் விருமாண்டி கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

Add a Comment

Leave a Reply