Advertisement

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’… இரண்டாவது பாடல் வெளியீடு!

இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மக்கள் காவலன்’. ஊழல் நிறைந்த அமைப்புக்கு மத்தியில் கண்ணியமாக வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அவன் எதிர்கொள்ளும் இரண்டு விதமான முடிவுகளையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது.

இதில் கே. மணிகண்டன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி, ரகு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அருள் மோசஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். ‘பைசன் காளமாடன்’ படத்தைத் தொடர்ந்து இந்தக் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.ஏற்கெனவே வெளியான முதல் பாடலான ‘இக்னோர்’ ரசிகர்களிடம் கவனம் பெற்றது. யோகி பி, நிவாஸ் கே. பிரசன்னா, அதிதி ஷங்கர் இணைந்து பாடிய இப்பாடலுக்கு எம்.கே. பாலாஜி வரிகள் எழுதியிருந்தார். இந்நிலையில், ஜோதி கண்ணா எழுதிய ‘இற இறகாக’ என்ற இரண்டாவது பாடலை நிவாஸ் கே. பிரசன்னா பாடியுள்ளார். இந்தப் பாடலும் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. ‘மக்கள் காவலன்’ திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Add a Comment

Leave a Reply