‘டைம்’ இதழ் முதல்முறையாக இந்தியாவின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை ‘TIME100 Next India’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. சினிமா, விளையாட்டு, அறிவியல், தலைமைப் பண்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த இதழின் முகப்புப் படத்தில் ஆலியா பட் இடம்பெற்றுள்ளார். மேலும், ஆர்யன் கான், அனிருத் ரவிச்சந்தர், தில்ஜித் தோசன்ஜ், குகேஷ் உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சினிமா துறையில் சமந்தா, சாய் பல்லவி, இஷான் கட்டர், நயன்தாரா, பார்வதி திருவோத்து, பா. ரஞ்சித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இசைத் துறையில் அறிவு, அனிருத், தில்ஜித், இஷான் கோஷ், ஜஸ்லீப் ரோயல், பிரதீக் குந்த் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்த இதழ் டிசம்பர் 12-ம் தேதி மும்பையில் நடைபெறும் விழாவில் அறிமுகமாக உள்ளது.
