Advertisement

‘டாடா’ இயக்குனர் – ஜேசன் சஞ்சய் கூட்டணியில் உருவாகிறதா புதிய திரைப்படம்?

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன், எதிர்பார்த்த வெற்றியையும் பெறவில்லை. இதையடுத்து, ஜேசன் சஞ்சய் நடிகராக அறிமுகமாகத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

முதலில் இயக்குநர் அட்லி தயாரிப்பில் அவர் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஜேசன் சஞ்சய் நாயகனாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘தமிழில் ‘டாடா’, ‘கராத்தே பாபு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கணேஷ் கே. பாபு இப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதையை ஜேசன் சஞ்சய்யிடம் கூறியதாகவும், அவர் இந்த கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply