‘உறியடி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனம் பெற்றவர் விஜயகுமார். தொடர்ந்து ‘உறியடி 2’ படத்திலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். கடைசியாக ‘ஃபைட் கிளப்’ திரைப்படத்தில் ஆக்ஷன் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் ‘அறிவு’ என்ற புதிய படத்தில் விஜயகுமார் நடித்து முடித்துள்ளார். மலைக் கிராமங்களில் கல்வியைக் கொண்டு சேர்க்கும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
