Advertisement

‘ஓம்’ படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி… முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி பல மொழிகளில் வெளியாகிறது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில், படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய முதல்வர் விஜய்க்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அதிகாலை காட்சிக்கு வரும் ரசிகர்கள் பாதுகாப்புடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், திரைப்படத்தைப் பார்த்து மகிழ்வதே உண்மையான கொண்டாட்டம் என்றும் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலரின் கூட்டு உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவாவது. அத்தகைய திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய ஆதரவு, திரையரங்கிற்குச் சென்று திரைப்படங்களைப் பார்ப்பதும், அதன் மூலம் திரையுலகின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதும்தான். வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் “ஓம்”திரைப்படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசிற்கும், மரியாதைக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

காலை 6 மணி காட்சிக்கு வருகை தரும் ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்புடனும், பொறுப்புடனும், அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் நடந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். திரைப்படத்தைப் பார்த்து மகிழ்வதே உண்மையான கொண்டாட்டம்!அனைவருக்கும் அன்பும், நன்றியும்… என தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply