2026-ம் ஆண்டில் ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘சீன்’ என மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார் நடிகர் சூர்யா. தற்போது ‘ஜெய்பீம்’ பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் தனது 48-வது படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கடுத்து சூர்யாவின் 49-வது படத்தை ‘மண்டாடி’ படத்தை இயக்கிய மதிமாறன் புகழேந்தி இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும், இப்படத்தில் தெலுங்கு நடிகர் கோபிசந்த் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
ஆனால், இந்தத் தகவலை கோபிசந்த் தரப்பு மறுத்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வரவிருக்கும் தமிழ்ப் படத்தில் கோபிசந்த் வில்லனாக நடிக்க இருப்பதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை ஊடகங்களும் சமூக வலைதளப் பக்கங்களும் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
