தமிழில் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிம்புதேவன், கடைசியாக ‘போட்’ திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் விமலை வைத்து புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு ‘நவோரியா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதில் அன்ஷீத்தல் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தில் ஆரி அர்ஜுனன், தம்பி ராமையா, வடிவுக்கரசி, பால சரவணன், அப்புக்குட்டி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பேண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படம் வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
