சேகர் கேசவ் சிரின் இயக்கத்தில் சிவம் சங்கர், ஆல்பியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பீட்சா பாய்ஸ்’. சரத் லோஹிதாஸ்வா வில்லனாக நடித்துள்ளார்.
பெங்களூருவைப் பின்னணியாகக் கொண்ட இப்படத்தில், பீட்சா கடையில் வேலை செய்யும் நாயகன் அங்கிருந்து வெளியேறி, நண்பர்களின் உதவியுடனும் நாயகியின் ஆதரவுடனும் சொந்தமாக பீட்சா கடை தொடங்குகிறார். அவரது கடைக்கு வரவேற்பு கிடைக்க, வில்லனுடன் ஏற்படும் மோதலும், மற்றொரு வழக்கில் நாயகன் சிக்குவதும் கதையாக அமைந்துள்ளது.
நான்கு நண்பர்களை மையமாகக் கொண்ட இப்படத்திற்காக நாயகன் சிவம் சங்கர் 20 கிலோ எடையை அதிகரித்து பின்னர் குறைத்துள்ளார். படத்திற்கு இயக்குநரே இசையமைத்துள்ளார். சர்ச்சைக்குரிய வார்த்தை இடம்பெற்றுள்ள பாடலின் வரிகள் சென்சார் காரணமாக மாற்றப்பட உள்ளதாகவும், படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
