Advertisement

‘சத்யவான் சாவித்திரி’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

கீர்த்தி சுரேஷ், இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சத்யவான் சாவித்திரி’. பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராகவும், அவருக்கு எதிராக வாதிடும் மற்றொரு வழக்கறிஞராக மிஷ்கினும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் பால சரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம். சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் கவனம் பெற்ற நிலையில், தணிக்கை வாரியம் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘சத்யவான் சாவித்திரி’ நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Add a Comment

Leave a Reply