தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சிபிராஜ் திரைத்துறையில் புதிய முயற்சியை தொடங்கியுள்ளார். இன்று அக்டோபர் 6ம் தேதி ‘Underdog Films’ என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை அவர் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த நிறுவனத்தின் முதல் படமாக ‘Production No.1’ உருவாகி வருகிறது. ‘ஜீப்ரா’ படத்தை இயக்கிய ஈஷ்வர் கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தில் சிபிராஜே கதாநாயகனாக நடிப்பதுடன், தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் நடிப்புடன் தயாரிப்பிலும் நேரடியாக களமிறங்கி தனது திரைப்பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். ‘Production No.1’ படத்தின் கதை, ஜானர், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. விரைவில் படக்குழு சார்பில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
