ஒருவரின் கனவில் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கக்கூடிய சம்பவங்கள் நிஜத்தில் நடந்தால் என்ன ஆகும்? இப்படியான வித்தியாசமான கற்பனையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ட்ரோன்ஸ்’. ஹாரர், பேண்டஸி மற்றும் சயின்ஸ் பிக்ஷன் என வெவ்வேறு ஜானர்களை ஒன்றிணைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் கதையில் மேட் சயின்டிஸ்ட், டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி என பல மர்மமான கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்ஜே தீபக் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹரி எஸ்.ஆர். இசையமைத்துள்ளார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஆர். கிஷோர் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர். வித்தியாசமான காட்சியமைப்புகள் மற்றும் மர்மமான கதாபாத்திரங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ‘ட்ரோன்ஸ்’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. புதிய கதைக்களம் மற்றும் ஹாரர், பேண்டஸி, சயின்ஸ் பிக்ஷன் கலவையுடன் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
