நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் மீது முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஜெயிலர் 2’ படத்திற்கு UA 16+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்தின் சமீபத்திய படமான ‘கூலி’ ஏ சான்றிதழ் பெற்றிருந்தது. இதனால் குடும்பத்துடன் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு சில கட்டுப்பாடுகள் ஏற்பட்டதாகவும், அது வசூலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இதுபோன்ற சூழல் ‘ஜெயிலர் 2’ படத்திற்கு ஏற்படக்கூடாது என ரஜினிகாந்த் தனது ஆலோசனையை படக்குழுவிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து படத்தில் இடம்பெற்றிருந்த சில ரத்தம் தெறிக்கும் காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது படத்திற்கு UA 16+ சான்றிதழ் கிடைத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல், குடும்ப ரசிகர்களின் எதிர்பார்ப்பிலும் கவனம் பெற்றுள்ளது.
—
