8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘96’!

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் பிரேம் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இப்படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் சர்வானந்த், சமந்தா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. அதேபோல் கன்னடத்திலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்த ‘96’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் முயற்சிகளும் பின்னர் கைவிடப்பட்டன. இந்நிலையில், படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் அக்டோபர் 9-ம் தேதி ‘96’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading