நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்து கடந்த சில காலமாகவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக அவரது ரசிகர் நற்பணி மன்றம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. முன்னணி நடிகராக தொடர்ந்து படங்களில் நடித்து வரும் தனுஷ், மறுபுறம் தனது ரசிகர் மன்றத்தையும் மாவட்ட அளவில் கட்டமைத்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டதுடன், தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சூழலில், தனுஷ் தனது அரசியல் கட்சியின் பெயரை தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தனது கட்சிக்கு ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், விரைவில் தனுஷ் தனது அரசியல் நிலைப்பாட்டை பொதுவெளியில் அறிவிக்கலாம் என்றும், அப்போது கட்சியின் கொடி, கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவையாகவே உள்ளன.
