Advertisement

‘சந்தியா ராகம்’ சீரியல் செய்த சாதனை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் ‘சந்தியா ராகம்’ தொடர் தற்போது 1000 நாட்களை நிறைவு செய்துள்ளது. ஜானகி, சந்தியா ஆகிய இரு சகோதரிகளின் குடும்பத்தையும், அவர்களது பிள்ளைகளான தனலட்சுமி, மாயா ஆகியோரின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாகி வருகிறது. குடும்ப உறவுகளின் பாசம், இளம் தலைமுறையினரின் காதல் மற்றும் சொந்தங்களின் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர், தொடர்ந்து குடும்ப ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply