கன்னடத்தில் உருவாகி வரும் ‘லம்போதரா 2.0’ திரைப்படத்தில் முதன்முறையாக நிஜமாக உருவாக்கப்பட்ட ஹியூமனாய்டு ரோபோ ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. ‘ஜியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவை பெங்களூரைச் சேர்ந்த மச்சாணி ரோபோட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. பிரபல கன்னட இயக்குனர் சிம்பிள் சுனி இயக்கும் இப்படம், ஜென்-ஸி தலைமுறையின் வாழ்க்கை முறை, சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.
Add a Comment
