Advertisement

மிகவும் பிரமாண்டமாக நடந்த சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றி, அதன் மூலம் பல்வேறு சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். ரத்ததான முகாம்கள், கல்வி உதவிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் என தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

தனது நற்பணி இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது நேரில் சந்தித்து வரும் சிவகார்த்திகேயன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிர்வாகிகளை ஒரே இடத்தில் சந்திக்க முடிவு செய்தார். இதற்காக சென்னை முகலிவாக்கத்தில் இன்று நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மேடை மற்றும் ஏற்பாடுகள் அரசியல் மாநாட்டை நினைவுபடுத்தும் வகையில் பிரமாண்டமாக இருந்தன. சுமார் ஆயிரத்துக்கும் நற்பணி இயக்க நிர்வாகிகள் வெள்ளை சட்டை அணிந்து ஒரே இடத்தில் திரண்டனர். இதனால் நிகழ்வு முழுவதும் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளின் கூட்டத்தால் பரபரப்பாக காணப்பட்டது.

—

Add a Comment

Leave a Reply