Advertisement

“சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன்” – டி.ராஜேந்தர் பளீச்!

தனது 71வது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர், ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படம் குறித்தும் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் பேசியுள்ளார். சாய் ரமணி இயக்கும் இப்படத்துக்கு பாடல்கள் எழுதி இசையமைத்து வரும் அவர், படக்குழுவினரின் கோரிக்கையை ஏற்று இளையராஜா ஒரு பாடலை பாடிக் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இளையராஜாவை பாட வைக்க அழைக்கும்போது அவர் வருவாரா என்ற தயக்கம் தனக்கு இருந்ததாக டி.ராஜேந்தர் கூறினார். இதற்கு காரணம் தனது சுயமரியாதை மற்றும் தன்மானம் மீது தான் கொண்டுள்ள பிடிப்பு என குறிப்பிட்ட அவர், வாழ்க்கையில் எத்தனை அவமானங்களும் சிரமங்களும் வந்தாலும் அதற்காக தனது தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

தான் சந்தித்த கேலி, கிண்டல் மற்றும் அவமானங்களை கடந்து வந்ததாக கூறிய டி.ராஜேந்தர், எதிர்மறையான விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ளாமல் கடந்து செல்ல வேண்டும் என இளைய தலைமுறையினருக்கு அறிவுரை வழங்கினார். அதேபோல் வாழ்க்கையில் “இருக்க வேண்டும்” என்ற எண்ணத்தைவிட, “கொடுக்க வேண்டும்” என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

—

Add a Comment

Leave a Reply