நடிகை பிரியங்கா மோகன், 2019-ம் ஆண்டு தெலுங்கில் நானியுடன் நடித்த ‘கேங் லீடர்’ படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் கவனம் பெற்றார். தொடர்ந்து தமிழில் ‘டாக்டர்’ படத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார். தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
அவர் நடித்து வரும் படங்களில் ஒன்றான ‘ஏஜிஎஸ் 29’ படத்தை எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். இதில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் நாசர், ராஜீவ் மேனன், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர்.
‘கேஜிஎஃப்’ பட இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். திகில் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் பிரியங்கா மோகனின் கண்கள் வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படம் திகில் கதையா அல்லது அறிவியல் புனைகதையா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
