விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரணபாலி’ திரைப்படம் அக்டோபர் 16ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், இருவரும் தற்போது தீவிரமான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே பேட்டி ஒன்றில் பேசிய விஜய் தேவரகொண்டா, தனது குடும்ப வாழ்க்கை குறித்தும் ராஷ்மிகா குறித்தும் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு தனது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்த அவர், நல்ல குடும்பம் அமைந்ததும், ராஷ்மிகா போன்ற மனைவி கிடைத்ததும் தனது பாக்கியம் என தெரிவித்துள்ளார்.
‘ரணபாலி’ படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள நிலையில், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த இந்த பேச்சு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திரையில் இருவரின் ஜோடியையும் காண ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
