15 ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தாமல் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியின் ‘ரூம் நம்பர் 418’-ஐ மையமாக வைத்து உருவாகியுள்ள ஹாரர் த்ரில்லர் திரைப்படம் ‘418’. அந்த அறையை சுற்றி அடுத்தடுத்து நிகழும் மர்மமான சம்பவங்களும், அதைத் தேடி செல்லும் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுமே படத்தின் முக்கியக் கதையாக அமைந்துள்ளன.
வழக்கமான காமெடி கலந்த ஹாரர் படங்களிலிருந்து மாறுபட்டு, முழுக்க சீரியஸ் ஹாரர் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. முதலில் ஜூலை 31ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், CBFC சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. படத்தில் இடம்பெற்றுள்ள அதிகப்படியான திகில் காட்சிகள் தொடர்பாக ஆட்சேபனை எழுந்ததாகவும், இதனால் ‘ஏ’ சான்றிதழுடன் படம் வெளியாகும் சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இயக்குநர் பிரசாந்த் நீலிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தன் நடகௌடா, ‘418’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரிலீஸுக்கு முன்னதாக ‘418’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுhttps://m.youtube.com/watch?v=teyF15t-8lQ&pp=ygULNDE0IHRyYWlsZXI%3Dள்ளது. பூட்டப்பட்ட அறைக்குள் மறைந்திருக்கும் மர்மம், திகிலூட்டும் காட்சிகள் என வெளியாகியுள்ள டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
