சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’, ‘சீமராஜா’, ‘அயலான்’ உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ஆர்.டி.ராஜா. அவருக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கடன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த அவர், தற்போது அதிலிருந்து மீண்டு மீண்டும் திரைப்பட தயாரிப்பில் களமிறங்கியுள்ளார்.
இதற்காக ‘மந்திரா ஸ்டூடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை ஆர்.டி.ராஜா தொடங்கியுள்ளார். நிறுவனத்தின் முதல் படைப்பாக இயக்குநர் டி.முத்துராஜ் இயக்கும் ஹைபர் ரியாலிஸ்டிக் டிஜிட்டல் ஹைபிரிட் திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது.
பல திரைப்படங்களில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றிய டி.முத்துராஜ், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். புதிய சிந்தனைகளுடன் திரைப்படங்களை உருவாக்கும் நோக்கில் ‘மந்திரா ஸ்டூடியோஸ்’ தொடங்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரிக்க உள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
—
