வித்தியாசமான ஃபேண்டஸி உலகம்… அக்டோபர் 16ல் வெளியாகும் ‘ட்ரோன்ஸ்’!

‘பன் பட்டர் ஜாம்’ படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் அடுத்ததாக ‘ட்ரோன்ஸ்’ என்ற வித்தியாசமான திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஜிஎம் மோர்கன் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் உருவாகியுள்ளது.

கற்பனை நிறைந்த புதிய உலகத்துடன் ஹாரர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதால், ‘ட்ரோன்ஸ்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வழக்கமான கதைக்களத்திலிருந்து மாறுபட்ட அனுபவத்தை இந்தப் படம் வழங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, ‘பரிதாபங்கள்’ புகழ் டிராவிட் செல்வம், விஜய் டிவி புகழ் குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஆர்ஜே தீபக் இந்தப் படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார். இந்நிலையில், ‘ட்ரோன்ஸ்’ திரைப்படம் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading