‘நாஸா’ ஆவணப்படத்திற்கு இத்தாலியில் அமோக வரவேற்பு!

காஸா போர் தொடர்பான நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘நாஸா’ என்ற 80 நிமிட ஆவணப்படம் இத்தாலியில் கவனம் பெற்றுள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற இஸ்ரேலிய இயக்குநர்களான யுவல் ஆப்ரஹாம் மற்றும் ரேச்சல் ஸ்சோர் இணைந்து இயக்கியுள்ள இந்தப் படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்றுள்ளது.

செப்டம்பர் 28ம் தேதி இத்தாலி திரையரங்குகளில் வெளியான ‘நாஸா’, முதல் நாளில் மட்டும் ரூ.4 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகவும், செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி அதன் வசூல் ரூ.11 கோடியைத் தாண்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மறுவெளியீடு செய்யப்பட்ட ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் இத்தாலியில் முதல் இரண்டு நாட்களில் ரூ.3.48 கோடி வசூலித்ததாக ‘தி கார்டியன்’ செய்தி தெரிவித்துள்ளது.

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் உயிரிழந்த பாலஸ்தீன மக்களின் நிலையை பதிவு செய்யும் வகையில் இப்படத்தின் காட்சிகள் ரகசியமாக படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் மூன்று நாட்களுக்கு மட்டுமே திரையிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இத்தாலியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து திரையிடும் காலம் நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading