Advertisement

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படம்!

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம்’ ஆகிய படங்களை இயக்கிய விஷால் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் தயாரித்து வரும் இப்படத்தில் நாசர், ரெஜினா கேசண்ட்ரா, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் தலைப்பு இதுவரை வெளியிடப்படாத நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதை அறிவிக்கும் வகையில் படக்குழு அக்டோபர் 2ம் தேதி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. விரைவில் படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேசம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த கூடுதல் தகவல்கள் தலைப்பு அறிவிப்புடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

—

Add a Comment

Leave a Reply