ஸ்வீட் செப்டம்பர்… வைரலாகும் நடிகை துஷாரா விஜயன் பதிவு!

தமிழில்‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடம் தனி கவனம் பெற்றவர் துஷாரா விஜயன். அதன்பிறகு தனுஷுடன் ‘ராயன்’, ரஜினிகாந்துடன் ‘வேட்டையன்’, விக்ரமுடன் ‘வீர தீர சூரன்’ என அடுத்தடுத்த படங்களில் நடித்த அவர், மலையாளத்திலும் ‘காட்டாளன்’ மூலம் அறிமுகமானார்.

மாதவனுடன் ‘ஜிடி நாயுடு’ படத்திலும், ராஜு ஜெயமோகன் இயக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே பா. ரஞ்சித் இயக்கும் ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்திலும் மீண்டும் நடித்து வருகிறார்.

உடற்பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தி வந்த துஷாரா, கடந்த சில மாதங்களாக பாக்ஸிங் பயிற்சியுடன் உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தார். இதன் மூலம் நான்கு மாதங்களில் 13 கிலோ வரை உடல் எடையை குறைத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் எடுத்த தனது உடற்பயிற்சி, சுற்றுலா, உணவு மற்றும் நொறுக்குத்தீனி தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் துஷாரா. அந்தப் பதிவுக்கு “இனிமையான செப்டம்பர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading